ஐஎஸ் குழுவுடன் போக்கோ ஹராம் போராளிகளுக்குத் தொடர்பு

அபுஜா: நைஜீரியாவில் உள்ள போக்கோ ஹராம் போராளிகளுக்கு ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல் திடுக்கிடும் தகவல் என்று ஐநா பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகளிலும் மத்திய ஆப்பிரிக்காவிலும் அமைதியையும் நிலைத்தன்மையையும் தொடர்ந்து சீர்குலைக்கப்போவதாக போக்கோ ஹராம் போராளிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே அமெரிக்க அதிகாரி ஒருவர், போக்கோ ஹராம் போராளிகள் லிபியாவில் உள்ள ஐஎஸ் குழுவுடன் சேர்ந்து சண்டையிட்டு வருவதாகக் கூறியுள்ளார். நைஜீரியாவின் அபுஜா நகரில் பாதுகாப்பு மாநாடு தொடங்கிய வேளையில் ஐநா பாதுகாப்பு மன்றம், ஐஎஸ் குழுவுடன் போக்கோ ஹராம் போராளிகளுக்கு உள்ள தொடர்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.