ஈராக் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல்: 14 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள எரிவாயு தொழிற்சாலை மீது போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். நேற்றுக் காலை அந்தத் தொழிற்சாலைக்கு முன்பு கார் குண்டு வெடித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அந்த தொழிற்சாலைக்குள் நுழைந்த துப்பாக்கிக்காரர்கள் 6 பேர் பாதுகாப்புப் படையினருடன் மோதியபோது தங்கள் உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் போராளிகளே காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Loading...
Load next