பரிவுமிக்க இதயத்துடன் ஹாங்காங் வந்த சீன அதிகாரி

ஹாங்காங்: ஹாங்காங்கில் தனது பிடியை சீனா இறுக்கி வரும் வேளையில் ஹாங்காங் வந்துள்ள சீனாவின் செல்வாக்குமிக்க அதி காரி ஒருவர், “பரிவுமிக்க இதயத் துடன் வந்துள்ளேன்,” என்று கூறி யிருக்கிறார். சீனாவின் கம்யூனிச நாடாளு மன்றத்தின் நாயகர் திரு ஷாங் டெஜியாங் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு ஹாங்காங் வந்துள்ளார். சீனாவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் ஹாங்காங்குக்கு வருவது நான்கு ஆண்டுகளில் இதுவே முதல்முறை. இவரது வருகை, பாதி தன் னாட்சியுடன் செயல்படும் ஹாங் காங்கின் சுதந்திரத்துக்கு மிரட் டலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை நடைபெறும் பொருளியல் மாநாட்டில் பேசுவதற் காக திரு ஷாங், ஹாங்காங் வந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் சுதந்திர ஆதரவாளர்களிடையே இவரது வருகை கோபத்தை மூட்டியிருக்கிறது. இந்நிலையில் இன்று ஜன நாயக ஆதரவு அமைப்புகள் ஆர்ப் பாட்டங்களில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது. சிலர் திரு ஷாங்கை நெருக்கமாக அணுகப் போவதாகவும் கூறியுள்ளனர். நேற்றுப் பிற்பகல் ஹாங்காங் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த திரு ஷாங் டெஜியாங்கை ஹாங்காங் தலைமை நிர்வாகி லுவெங் சுன் யிங் வரவேற்றார்.