எகிப்திய விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது

பாரிஸ்: பாரிஸ் நகரிலிருந்து கெய்ரொவுக்குச் செல்லும் வழியில் ராடார் திரையிலிருந்து மறைந்த எகிப்திய விமானம் ஒன்று கிரீஸ் தீவுக்கு அருகே உள்ள கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கிரீஸ் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரெஞ்சு அதிபர் ஹொலாண் டும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். அந்த விமானம் திரை யிலிருந்து மறைவதற்கு முன்பு வேகமாக திரும்பியதாக கிரீஸ் தற்காப்பு அமைச்சர் கூறியுள்ளார். பாரிசிலிருந்து மொத்தம் 66 பேருடன் புறப்பட்ட அந்த விமானம் எகிப்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது ராடார் திரையிலிருந்து மாயமானது. அந்த விமானம் கர்பாத்தோஸ் தீவுக்கு அருகே கடலில் விழுந்து நொறுங்கியது பின்னர் கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த விமானத் தில் மூன்று குழந்தைகள் உள்பட 56 பயணிகளும் பத்து சிப்பந்தி களும் இருந்ததாக எகிப்துஏர் நிறுவனம் தெரிவித்தது. அந்த விமானத்தில் சென்ற பயணிகளில் 26 பேர் வெளிநாட்டவர்கள். பிரெஞ்சு நாட்டவர்கள் 15 பேரும் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அதில் இருந்தனர். 30 பேர் எகிப்தியர்கள். பாரிசிலிருந்து புதன்கிழமை இரவு புறப்பட்ட எகிப்துஏர் நிறு வனத்திற்குச் சொந்தமான MS804 விமானம் எகிப்திய வான் வெளியில் 11,300 மீட்டர் உயரத் தில் பறந்துகொண்டிருந்தபோது ராடாரிலிருந்து மறைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கெய்ரோ நேரப்படி புதன்கிழமை இரவு 2.45 மணிக்கு அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார். மாயமாகியுள்ள விமானத்தை தேடும் பணியில் எகிப்து ராணு வமும் அதிகாரிகளும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித் துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

பாரிஸ் நகரிலிருந்து கெய்ரோவுக்குப் புறப்பட்ட எகிப்திய விமானம் ஒன்று பாதி வழியில் மாயமாய் மறைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து விமானப் பயணிகளின் உறவினர்கள் கெய்ரோ விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியானதும் உறவினர்கள் பலர் கதறி அழுதனர். அவர்களுக்கு நண்பர்கள் ஆறுதல் கூறுகின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!