கடத்தப்பட்ட நைஜீரிய மாணவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்பு

அபுஜா: நைஜீரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப்பட்ட சிபோக் நகரப் பள்ளி மாணவிகள் 219 பேரில் ஒருவர் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவின் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத் தலைவரும் உள்ளூர் குழுத் தலைவரும் இந்தத் தகவலை புதன்கிழமை தெரிவித்தனர்.

சிபோக் நகரில் போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப்பட்ட அமீனா அலி என்ற மாணவி, வனப் பகுதியில் புதன்கிழமை இரவு மீட்கப்பட்டதாக சிபோக் நகரத்தின் குழுத் தலைவர் கூறினார். கடத்தப்பட்ட மாணவிகளில் 57 பேர் போராளி களிடமிருந்து தப்பி வந்தாலும் எஞ்சிய 219 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அவர்களில் ஒரே ஒரு மாணவி முதல் முறையாக மீட்கப்பட்டுள்ளார்.

போக்கோ ஹராம் போராளிகளால் கடத்தப்பட்ட அமீனா அலி என்ற மாணவி. படம்: ராய்ட்டர்ஸ்