மலேசிய போலிஸ் தீவிரம்

பெட்டாலிங் ஜெயா: பிரான்சில் அடுத்த சில வாரங்களில் தொடங்க இருக்கும் ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டியைப் பலரும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் அப்போட்டி தொடர்பிலான சூதாட் டத்தை முறியடிப்பதில் மலேசியப் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காற்பந்து சூதாட்ட தொழிலில் கிட்டத்தட்ட 120 மில்லியன் ரிங்கிட் புழங்குவதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். பெரிய அளவிலான போட்டிகள் நடைபெறும்போதெல்லாம் சூதாட் டம் பரவும் என்பதைத் தெரிந்து கொண்ட ரகசியக் கும்பல், சூதாட்டம், விபசாரத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கடந்த ஒருமாத காலமாக சூதாட்டத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின் றனர்.

'ஓப்ஸ் சோகா' என்னும் நாட ளாவிய வேட்டை மூலம் சட்ட விரோத பந்தயப் பிடிப்புக் கும்பல் களைத் தேடிப் பிடிக்கும் நட வடிக்கையைத் தொடங்குவதற் கான பணிகள் தயாராக உள்ள தென்று மூத்த துணை போலிஸ் ஆய்வாளர் ரோஸ்லீ சிக் தெரி வித்தார். இரண்டாண்டுகளுக்கு முன் னர் பிரேசிலில் நடந்த ஃபிஃபா உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின்போது மலேசியா முழு வதும் 828 தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு 424 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 10 பெண்களும் அடக்கம் என்றும் அவர் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!