சுரங்கப் பகுதியில் நிலச்சரிவு: 12 பேர் மரணம்

யங்கூன்: மியன்மாரில் விலை உயர்ந்த கற்களை தோண்டி எடுக்கும் சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது அப் பகுதியில் சுமார் 50 பேர் கற்களை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக அதிகாரி ஒருவர் கூறினார். அப்பணியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவ தாகவும் காணாமற்போனவர்கள் நிலச் சரிவில் உயிருடன் புதையுண்டிருக் கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் மீண்டும் அங்கு நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இதுவரை 12 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும் இன்னும் எத்தனை பேரைக் காணவில்லை என்பதை அறிய பக்கத்து வீடுகளில் விசாரணை செய்து வருவதாகவும் போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த நவம்பர் மாதம் அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர். இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!