வரலாறு காணாத மழை; பாரிசில் வெள்ள அபாயம்

பாரிஸ்: பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத் தில் மிதப்பதாகக் கூறப்படுகிறது. பாரிஸ் மற்றும் பிரான்சின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. பாரிசில் ஓடும் ஸுன் ஆற்றின் இருபுறமும் வெள்ளநீர் கரை புரண்டோடுகிறது. சில இடங் களில் உடைப்பு ஏற்பட்டு நகருக் குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் சாலைகளில் போக்கு வரத்து நிலைகுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸுன் ஆற்றங்கரைப் பகுதியில் அவசர தடுப்புகள் போடப்பட் டுள்ளன. மத்திய பிரான்சிலும் பாரிசிலும் சுமார் 25,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்க நேர்ந் துள்ளது. பாரிசிலுள்ள உலகப் புகழ்பெற்ற அரும்பொருளகங்களில் உள்ள விலைமதிப்பில்லாத கலைப் பொருட்களை பாதுகாப்பான இடத் திற்கு கொண்டு செல்வதற்காக அவ்விரு அரும்பொருளகங்களும் மூடப்பட்டுள்ளன. கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக ஜெர்மனியிலும் பிரான்சிலும் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேரிடரில் ஆயிரக்கணக் கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். பாதுகாப்பை கருத் தில் கொண்டு ஏராளமானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.

மத்திய ஐரோப்பா முழுவதும் வார இறுதியில் கனமழை தொடர்ந்து பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது. ஒரு சில பகுதிகளில் சில மணி நேரங்களுக்குள் 50 மி.மீ அளவு மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ஜெர்மனியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து குடியிருப்புப் பகுதியில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தில் சேதமடைந்த ஒரு காருக்குப் பக்கத்தில் குடியிருப்பாளர் ஒருவர் நடந்து செல்கிறார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!