ஆற்றில் மூழ்கிய படகிலிருந்து 43 பேர் மீட்பு; தேடுதல் பணி தொடர்கிறது

டனாங்: டனாங்கில் உள்ள ஹான் நதியில் பயணிகள் படகு மூழ்கியதை அடுத்து நான்கு மலேசியர்கள் உள்ளிட்ட 43 சுற்றுலாப் பயணிகளை மீட்ட வியட்னாமிய அதிகாரிகள் இரு குழந்தைகள், ஒரு ஆடவர் ஆகியோரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு நேர்ந்த இந்த விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் படகு 28 பேரை மட்டுமே ஏற்றிக்கொள்ளும் திறன் கொண்டது என்று கூறப்பட்டது. சுற்றுப் பயணிகளை ஏற்றிச்செல்லும் படகுகள் சட்டத்தைப் பின்பற்றுவதைக் கன்காணிக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் ங்குயன் சுவான் ஃபுக் ஆணையிட்டுள்ளார். 70 பேர் கொண்ட மீட்புப் படை தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.