அமெரிக்கருக்கு 10 ஆண்டு சிறை

நோம்பென்: சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய அமெரிக்கர் ஒருவருக்கு கம்போடியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நோம்பென் நகரில் உள்ள ஒரு சிறிய நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரைன் நஸ்வல் என்ற 53 வயதான அமெரிக்கர், ஐந்து வயதுக்கும் குறைந்த மூன்று சிறுமிகள் உள்பட 8 சிறுமியர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த அமெரிக்கர் இழப்பீட்டுத் தொகையாக அவர் 16,000 அமெரிக்க டாலர் தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்பணம் அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் என்று தகவல்கள் கூறின.