புரோட்டானின் பொற்காலம் திரும்பும்

திரு மகாதீரின் அரசியல் தலையீடு இல்லாததால், தேசியக் கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டான் ஹோல்டிங்ஸின் பொற்காலம் மீண்டும் திரும்பும் என தான் எதிர்பார்ப்பதாக மலேசியப் பிரதமர் நஜிப் தெரிவித்துள்ளார். திரு மகாதீர் புரோட்டான் நிறுவனத்தின் தலைவர் பதவி யிலிருந்து இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி விலகினார்.