வீரர்களை அழைத்துவந்த விண்கலம் பத்திரமாக தரை இறங்கியது

வா‌ஷிங்டன்: அனைத்துலக விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து மூன்று வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஸக்ஸ்தான் நாட்டில் நேற்று பத்திரமாக தரை இறங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர். பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் அனைத்துலக விண்வெளி மையத்தை அமைத் துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள் வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் மற்றும் வீராங்கனை அந்த நாடுகள் அவ்வப்போது அனுப்பி வருகின்றன. இதேபோல் அங்கிருந்தும் வீரர்கள் பூமிக்குத் திரும்பி வருவதுண்டு.

அவ்வகையில், இன்று அனைத்துலக விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஸக்ஸ்தானில் உள்ள ஒரு நகரில் இன்று தரை இறங்கியது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்களுடன் வந்த அந்த விண்கலம் புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் தரை இறங்கியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!