துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவை அமெரிக்க செனட் நிராகரித்தது

வா‌ஷிங்டன்: துப்பாக்கி கட்டுப்பாடு தொடர்பான நான்கு மசோதாக் களை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது. பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு துப்பாக்கி விற்பதை கட்டுப் படுத்துவது உள்ளிட்ட நான்கு மசோதாக்கள் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டன. ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் ஓர் இரவு கேளிக்கை விடுதியில் ஒரு துப்பாக்கிக்காரன் 49 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்குவது குறித்த யோசனைகள் அமெரிக்க செனட் சபையில் முன் வைக்கப்பட்டன. ஜனநாயகக் கட்சியினர் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக குடியரசுக் கட்சி செனட்டர்கள் வாக்களித்தனர். அதே போல குடியரசுக் கட்சியினர் தாக்கல் செய்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் நிராகரித் தனர். எதிர்காலத்தில் பயங்கர வாதத் தாக்குதல்களை எவ்வாறு தடுப்பது என்பதில் குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் வேறுபட்ட கருத்து களைக் கொண்டிருந்தனர்.