‘நஜீப்புக்கு எதிராகப் புதிய தளம் அமைக்க சுதந்திரம் உண்டு’

கோலாலம்பூர்: மலேசியாவின் ஆளும் கட்சியான அம்னோவிலிருந்து பதவி நீக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று முன்னாள் துணைப் பிரதமர் முகைதீன் யாசினும் கெடாவின் முன்னாள் முதல்வர் முக்ரிஸ் மகாதீரும் அறிவித்துள்ளனர். எந்த ஒரு கட்சியின்கீழ் இல்லாததால் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்கை அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்கொள்ள புதிய தளம் அமைக்கும் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டதாக திரு முகைதீன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுடன் ஆலோசனை பெறவிருப்பதாகவும் அவர் குறிப் பிட்டார். அரசாங்க சார்பற்ற அமைப்புகளுடனும் எதிர்க்கட்சி களுடன் கலந்துரையாடப் போவ தாகவும் திரு முகைதீன் தெரி வித்தார். 2018ஆம் ஆண்டுக்கு முன்பாகவே திரு நஜீப் தேர்தலை நடத்தலாம் என்ற பேசப்படும் போதிலும் அவருக்கு எதிராகப் புதிய தளம் ஒன்றை அமைக்க போதுமான நேரம் இருக்கிறது என்றார் அவர்.

"என்னிடம் நல்ல திட்டங்களும் அனுபவமும் உள்ளன. நிலையான வழியை முன்வைக்க ஒன்று சேர்ந்து செயல்படுவதே முக்கியம், எங்கள் இலக்கை அடைவது சாத்தியமே," என்று அவர் தெரி வித்தார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு முகைதீன், தாம் அம்னோவுக்கு ஒருபோதும் துரோகம் நினைத்ததில்லை என் பதை வலியுறுத்தினார். ஊழல் கறை படிந்த தலைவருடன் இணைந்து பணியாற்ற தம்மால் முடியவில்லை என்று அவர் திரு நஜீப்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!