துருக்கி விமான நிலையத்தில் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்

இஸ்தான்புல்: துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று துருக்கி கேட்டுக்கொண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பின்னேரத் தில் இஸ்தான்புல் விமான நிலையத்திற்குள் நுழைந்த மூன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டினர் 13 பேர் உள்பட 41 பேர் கொல்லப் பட்டனர் என்றும் 239 பேர் காயம் அடைந்தனர் என்றும் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்க வில்லை என்ற போதிலும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பே அத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என துருக்கிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தாக்குதல் நடந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, இது ஐஎஸ் பயங்கரவாதிகளின் கைவரிசைதான் என கருத வேண்டியுள்ளதாக துருக்கியப் பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவித்துள்ளார்.

சுமார் 41 பேரின் உயிரைப் பறித்த அத்தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, திருமதி ஹில்லரி கிளின்டன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூன், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல், சிங்கப்பூர் தலைவர்கள், மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்க துருக்கி உள்ளிட்ட மற்ற உலக நாடுகளுக்கு அமெரிக்கா உறு துணையாகவும் ஆதரவாகவும் இருக்கும் என்று வெள்ளை மாளிகை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அத்தாக்குதலுக்குக் காரண மானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்தாக்குதல் பற்றிய செய்தியைக் கேட்டதும் தாம் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உளவுத்துறை ஒத்துழைப்பு அவசியம் என்பதை அத்தாக்குதல் உணர்த்துவதாகக் கூறினார். ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கும் துருக்கி நாட்டு மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார்.

இஸ்தான்புல் நகரில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அந்த விமான நிலையத்தின் கண்ணாடிக் கதவுகள் உடைந்து சிதறிக் கிடக்கின்றன. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!