தலிபான் தலைவர்: ஆப்கானில் அமைதி ஏற்பட வெளிநாட்டினர் வெளியேற வேண்டும்

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டுமெனில் முதல் கட்டமாக அங்குள்ள வெளி நாட்டுப் படையினரின் ஆக்கிரமிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலிபான் போராளிப் படையின் தலைவன் கூறியுள்ளான். அத்துடன் நாட்டில் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் புதிய தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முல்லா ஹைபத்துல்லா கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையில் வெளி நாட்டு கூட்டணிப் படையினர் வெளியேறினால் உடன்பாடு சாத்தியம் என்று முல்லா ஹைபதுல்லா தான் முதன் முதலாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

"வெளிநாட்டுப் படையினருக் கான உங்கள் ஆதரவும் அவர் களை சார்ந்திருப்பதும் முன்னைய காலத்தில் பிரிட்டிஷாரையும் ரஷ்யர்களையும் ஆதரித்தவர்களை நினைவுபடுத்துகிறது," என்று முல்லா ஹைபதுல்லா அடுத்த வாரம் தொடங்கவுள்ள முஸ்லிம் பெருநாளுக்கு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஒன்றுபட்ட, சுதந்திர நாட்டை உருவாக்கும் திட்டம் ஒன்றை தலிபான் வைத்துள்ளது என்பதை காபூலில் உள்ள மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அரசாங்கத்துக்கு தெரிவிக்கப் பட்டதாகவும் அதில், "மன்னிப்பு வழங்கவும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வ தற்குமான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்பதை நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம்," என்றும் அந்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!