ஆளும் கட்சிப் பிரமுகரின் மகன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டான்

டாக்கா: பங்­ளா­தே­‌ஷில் உள்ள பிரபல உணவுக் கடையில் நிகழ்ந்த தாக்­கு­தல் தொடர்­பில் தாக்­கு­த­லின்­போது போலி­சி­டம் சிக்கி தடுத்து வைக்­கப்­பட்ட நபரும் வேறு ஒரு­வ­ரும் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் மீது வழக்கு தொடுக்­கப்­ப­ட­ இ­ருப்­ப­தாக போலிஸ் அதிகாரி ஷைஹிதுல் ஹக் ஏஎ­ஃப்­பி­யி­டம் கூறி­யுள்­ளார். மேற்­கத்­திய பாணி­யி­லான காப்பிக் கடை ஒன்றில் வெள்­ளிக்­கிழமை இரவு துப்­பாக்­கிச்­சூடு நடத்தி 20 பேர்­களைக் கொன்ற­தா­கக் கரு­தப்­பட்ட அறுவர் போலி­சா­ரால் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் ஒருவர் உயி­ரு­டன் பிடி­பட்­டார்.

வேறு ஒருவர் விசா­ரிக்­ கப்­படு­வ­தாக முன்பு கூறப்­பட்­டது. பங்­ளா­தே­‌ஷில் ஐஎஸ் அமைப்­பின் தடம் இல்லை என அந்நாடு தொடர்ந்து மறுத்­து­வந்த­போ­தும் இந்தத் தாக்­கு­த­லுக்­குப் பொறுப்­பேற்­றுள்ள ஐஎஸ் அமைப்பு, துப்­பாக்­கிச்­சூடு நடத்­தி­ய­வர்­கள் துப்­பாக்கி ஏந்­தி­ய­வாறு உள்ள புகைப்படங்களை இணை­யத்­தில் பதி­வேற்­றி­யுள்­ளது. போலி­சா­ரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­வர்­களில் ஒருவர் அங்கு நின்று கொண்­டி­ருந்த­வர். செல்வம் கொழிக்­கும் வீடு­களில் பிறந்து, நல்ல கல்வி வாய்ப்பை­யும் பெற்­ற­வர்­களே இந்தத் தாக்­கு­த­லில் ஈடு­பட்­ட­வர்­கள் என்பது அதிர்ச்­சிக்­கு­ரி­ய­தாக உள்ளதென கவனிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். அடை­யா­ளம் காணப்­பட்ட பயங்க­ர­வாதிகளில் ஒருவர் நிப்ராஸ் இஸ்லாம், 22. அவர் மொனாஷ் பல்­கலைக்­க­ழ­கத்­தின் மலேசிய வளா­கத்­தில் கல்வி பயின்றார் எனக் கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்டு ஜன­வ­ரிக்­ குப் பிறகு அவர் காணாமல் போனதும் அறி­யப்­பட்­டுள்­ளது.

அடை­யா­ளம் காணப்­பட்ட மற்றொரு நபரான ரோஹன் இமி­டி­யா­ஸும் மொனாஷ் பல்­கலைக்­ க­ழ­கத்­தின் மலேசிய வளா­கத்­தில் கல்வி பயின்றார் எனக் கூறப்­படு­கிறது. அவரது தந்தை இமிடியாஸ் கான் பபூல் ஆளும் கட்­சியைச் சேர்ந்த­வர். டாக்­கா­வின் முன்னாள் இளையர் விவ­கா­ரச் செய­லா­ள­ரா­கப் பதவி வகித்த அவர், சென்ற ஜன­வ­ரி­யி­லி­ருந்து தம் மகன் காணாமல் போயி­ருந்த­தா­கச் சொன்னார். துப்­பாக்­கிச் சூடு நடத்­திய மிர் சாமே முபா‌ஷீர் எனும் 18 வயது நபர் இவ்­வாண்டு மேல்­நிலைத் தேர்வு எழுத இருந்த­தா­க­வும் கடந்த பிப்­ர­வரி மாதத்தில் இருந்து காணாமல் போன­தா­க­வும் சொல்­லப்­படு­கிறது. தமது மக­னுக்கு மூளைச்­ச­லவை செய்து மனதை மாற்­றி­யி­ருக்­க­லாம் என அவரது தந்தை மிர் ஹயாட் கபிர் கூறினார்.

போலி­சா­ரால் கொல்­லப்­பட்ட ஐவரில் ஒருவர் மட்டுமே வச­தி­குறைந்த குடும்பத்தைச் சார்ந்த­வர் எனவும் அவர் கைருல் இஸ்லாம் பாயல் எனவும் அறி­யப்­பட் ­டுள்­ளது. பொதுவாக வசதி குறைந்த நிலையில் இருக்­கும் சுய தீவிர­வாத நோக்கம் கொண்ட­வர்­களே பயங்க­ர­வாதத் தாக்­கு­த­லில் ஈடு­பட்டு வந்­துள்ள நிலையில் இவ்­விளை­யர்­களின் செயல் பற்றி கருத்­துரைத்த உள்துறை அமைச்­சர் அசா­துஸ்­ஸ­மான் கான், "இது நாக­ரி­க­மாகி விட்டது," என்றார்.

டாக்காவில் உள்ள உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட 20 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பங்ளாதேஷ் பிரதமர் ஹசீனா (புடவையில்) பங்ளாதே‌ஷுக்கான ஜப்பான் தூதர் வட்னாபியுடன் உரையாடினார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!