சீனாவுக்கு எதிராக ஹேக் நடுவர்மன்றம் தீர்ப்பு

தி ஹேக்: தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனாவின் கோரிக்கைக்கு எதிராக நெதர் லாந்தில் உள்ள நடுவர்மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த கடல் பகுதியில் சீனா உரிமை கொண்டாடுவதற்கு சீனாவிடம் வரலாற்றுபூர்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று தி ஹேக் நடுவர்மன்றம் நேற்று அறிவித்தது. நடுவர்மன்றத் தீர்ப்பு வெளியானதும் அத்தீர்ப்பை தங்கள் நாடு ஏற்கப்போவதில்லை என்றும் அதை அங்கீகரிக்கப் போவதில்லை என்றும் சீனா அறிவித்துள்ளது.

தென்சீனக் கடல் பகுதி விவகாரம் தொடர்பில் சீனாவின் கோரிக்கைகளுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் 2013ஆம் ஆண்டு அனைத்துலக நடுவர்மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கு விசாரணை களில் சீனா பங்கேற்கவில்லை. பிலிப்பீன்ஸ் தரப்பில் மட்டும் ஒரு குழுவினர் தங்கள் கோரிக்கை களை வலுப்படுத்தும் ஆதாரங் களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்திற்கு இரு தரப்பு பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று சீனா கூறி வந்துள்ளது. இந்நிலையில் சீனாவின் கோரிக்கைக்கு எதிராகவும் பிலிப்பீன்சிற்கு ஆதரவாகவும் தி ஹேக் நடுவர்மன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

மணிலா கடற்கரையில் ஒன்றுகூடிய பலர் மலர்களை கடலில் வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!