சிரியாவில் ரஷ்யாவுடன் சேர்ந்து அமெரிக்கா கூட்டு நடவடிக்கை

வா‌ஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷ்யாவுடன் சேர்ந்து நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ரஷ்யா புறப்படுவதற்கு முன்பு அதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மறுப்பேதும் தெரிவிக்காத நிலையில் அதுகுறித்து வெளிப்படையாகப் பேச முடியாது என்று மட்டும் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜான் கெர்ரி ரஷ்யா செல்கிறார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் அல்-காய்தா ஆதரவு பெற்ற அல்-நுஸ்ரா அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒருங்கிணைந்து தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்த யோசனையை ஜான் கெர்ரி முன்வைப்பார் என்று "வா‌ஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!