1எம்டிபி விவகாரம்: $240 மி. பெறுமானமுள்ள சொத்துகள் பறிமுதல்

மலேசிய அரசாங்கத்தின் முத லீட்டு அமைப்பான 1எம்டிபி தொடர்பான விசாரணையில் சிங்கப்பூர் அதிகாரிகள் 240 மில்லியன் வெள்ளி பெறுமான முள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளனர். அந்தச் சொத்துகளில் பாதி, ஜோ லோ என்றழைக்கப்படும் மலேசிய செல்வந்தர் லோ டேக் ஜோ (படம்), அவரது குடும்பத் தினர் ஆகியோருக்குச் சொந்த மானவை. திரு லோ மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் குடும் பத்துக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1எம்டிபியிலிருந்து கையாடப் பட்டதாகக் கூறப்படும் பணத்தைக் கள்ளப் பணத்திலிருந்து நல்ல பணமாக்க அனைத்துலக அளவில் சதி வேலை நடந்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள சொத்துகளை அது நேற்று முன்தினம் பறிமுதல் செய்தது. அமெரிக்க அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை அடுத்து, 1எம்டிபி விசாரணை தொடர்பாக சிங்கப்பூரிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், வர்த்தக விவகாரப் பிரிவு, சிங்கப்பூர் நாணய ஆணையம் ஆகியவை நேற்று தெரிவித்தன.

1எம்டிபியிலிருந்து கையாடப் பட்ட பணத்தில் திரு லோ நியூயார்க்கிலும் பெவர்லியிலும் விலை உயர்ந்த வீடுகளையும் ஓவியங்களையும் வாங்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. திரு லோவுக்கு சிங்கப்பூரிலும் இரண்டு விலை உயர்ந்த வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அவர் 2013ஆம் ஆண்டில் 54 மில்லியன் வெள்ளிக்கு வாங்கினார் என்று பிஸ்னஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்திருந்தது. அந்த இரண்டு வீடுகளில் ஒன்றின் மதிப்பு 42.9 மில்லியன் வெள்ளி ஆகும். அது சிங்கப்பூரில் ஆக அதிகமான விலைக்கு விற்கப் பட்ட வீடுகளில் ஒன்று என்று கூறப்படுகிறது.

அமெரிக்கக் குற்றச்சாட்டின் படி 1எம்டிபியிலிருந்து 1.03 பில்லியன் அமெரிக்க டாலரைப் பெற்றுக்கொண்ட 'குட் ஸ்டார்' எனும் நிறுவனம் திரு லோவுக்குச் சொந்தமானது. 1எம்டிபியிலிருந்து கையாடப் பட்ட பணத்திலிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலரை திரு லோ தமது நிறுவனம் மூலம் கள்ளப் பணத்திலிருந்து நல்ல பணமாக்கினார் என்று அமெரிக்கா கூறுகிறது. இந்தப் பணத்தை திரு லோவும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களும் பயன்படுத்தி யதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!