துருக்கி: அதிபர் எர்டோகனின் அதிரடி நடவடிக்கைகள்

அங்காரா: துருக்கியில் ராணுவம், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதிலிருந்து அந்நாட்டு அதிபர் தாயிப் எர்டோகன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் ராணுவப் பயிற்சி நிலையங்களை மூடவும் உளவுத் துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அதிபர் விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த யோசனைகள் நாடாளுமன்றத் திற்கு கொண்டு செல்லப்படும் என்று அவர் கூறினார். அத்துடன் ராணுவத்தில் கூடுதல் அமைச்சர் களை உறுப்பினர்களாக இடம் பெறச் செய்யவும் அதிபர் திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராணுவப் பயிற்சி நிலையங்கள் மூடப்படும் என்றும் அதற்குப் பதிலாக தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் அதிபர் எர்டோகன் கூறியதாகத் தொலைக்காட்சி தகவல் கூறியது. இந்நிலையில் எர்டோகனின் ஆதரவாளர்கள் ஜெர்மனியில் நேற்று மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்திருந் தனர். இந்தப் பேரணியில் 30,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!