‘மெரினா பே’யைத் தாக்கும் சதி; மேலும் ஒருவர் கைது

ஜகார்த்தா: சிங்கப்பூரின் மெரினா பே வட்டாரத்தை ஏவுகணை மூலம் தாக்கும் சதித்திட்டம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை இந்தோனீசிய காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். 24 வயது சந்தேக நபரின் அடையாளம் 'எல்எச்' என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது. பாத்தாமில் உள்ள 'கேஜிஆர்' என்று குறிப்பிடப்படும் அமைப்பின் உறுப்பினர் அவர் என்றும் தெரி விக்கப்பட்டது. இந்த உள்ளூர் பயங்கரவாத அமைப்பு, முன்னைய தொழிற் சாலை ஊழியரான கிகி ரஹ்மட் டேவா தலைமையில் செயல்பட்ட தாகக் கூறப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு போராடி வரும் இந்தோனீசிய போராளி பஹ்ருன் நைம் உத்தரவின் பேரில் கிகி, 31, மெரினா பே மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததான். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கேஜிஆர் அமைப்பின் உறுப்பினர் களான கிகியையும் இதர ஐந்து சந்தேக நபர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். வேலை எதுவும் செய்யாத 'எல்எச்' பாத்து அஜியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே 'இண் டர்நெட் கஃபே'யில் கைது செய்யப்பட்டார் என்று நேற்று காவல்துறை பேச்சாளர் அகுஸ் ரியான்டோ கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!