மலேசியாவில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்ததில் 37 பயணிகள் காயம்

கோலாலம்பூர்: மலேசியாவில் சுற்றுலாப் பேருந்து ஒன்று தடம் புரண்டு சாய்ந்ததில் 37 பயணிகள் காயம் அடைந்தனர். கோலாலம்பூர்- சிரம்பான் நெடுஞ்சாலையில் நேற்றுக் காலை 9.00 மணியளவில் நிகழ்ந்த விபத் தில் பேருந்து பக்கவாட்டில் சாய்ந் தது என்று தீயணைப்பு, மீட்புப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரி வித்தார். அம்பாங்கிலிருந்து புறப்பட்டுப் பூச்சோங்கை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் மொத்தம் 44 பேர் பயணம் செய்தனர். காயம் அடைந்த பயணிகள் அனைவரும் கோலாலம் பூர் மருத்துவமனை, மலேசியா பல்கலைக் கழக மருத்துவமனை, செர்டாங் மருத்துவமனை ஆகிய வற்றில் சேர்க்கப்பட்டனர். காலை 9.37 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சுங்கை பீசியிலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்தோம் என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.

காயம் அடைந்த ஒரு பயணியை உதவியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். படம்: மலேசிய ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!