இந்தோனீசியா படகில் வெடிப்பு; இருவர் பலி

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தீவுகளான பாலிக்கும் லொம் பாக்குக்கும் இடையே பயணி களை ஏற்றிச் செல்லும் படகில் வெடிப்பு ஏற்பட்டதில் இரண்டு பேர் மாண்டனர். இவர்களில் ஒருவர் டச்சு நாட்டவர் என்றும் பயணிகளில் 18 பேர் காயம் அடைந்தனர் என்றும் காவல்துறையினர் கூறினர். படகில் இருந்த 35 பேரும் வெளிநாட்டவர்கள். கிழக்கு பாலியில் உள்ள பாடாங் பாய் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் படகில் வெடிப்பு ஏற்பட்டது. ஆனால் படகில் எப்படி வெடிப்பு ஏற்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை.

இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் விசாரணை மேற் கொண்டுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் பெண் பயணி. தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இறந் தார் என்று அதிகாரிகள் கூறினர். படகில் ஆஸ்திரேலியா, கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர்-. பாலியும் அதற்கு அருகில் உள்ள லொம்பாக் தீவும் வெளி நாட்டுச் சுற்றுலாப் பயணி களிடையே பிரபலமாக விளங்கு கின்றன.

காராங் அசெம் என்னுமிடத்தில் குண்டுவெடித்த இடத்தை காவல்துறையினர் சோதனையிடுகின்றன. ஏஎப்பி

Loading...
Load next