அமெரிக்காவில் ஒரே நாளில் மூன்று தாக்குதல்கள்; பல கோணங்களில் புலன்விசாரணை

நியூயார்க்: அமெரிக்காவில் 12 மணி நேரத்தில் நடந்த மூன்று தாக்குதல்கள் காரணமாக பயங்கரவாதம் பற்றிய அச்சம் அமெரிக்காவில் அதிகரித்துள்ள தாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று தாக்குதல்களைத் தொடர்ந்து நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதலாக சுமார் 1,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். உலகத் தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐநா கூட்டமும் நடைபெறவுள்ளதால் நியூயார்க்கில் பாதுகாப்பு வலுப்படுத்தப் பட்டுள்ளது.

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் குண்டு வெடிப்புகள், மினசோட்டாவில் கத்திக்குத்து தாக்குதல் இந்த மூன்றுக்கும் தொடர்பு உள்ளனவா என்பது குறித்து அமெரிக்க மத்திய புலன் ஆய்வுத் துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். சென்ற வார இறுதியில் சனிக்கிழமை நடந்த அந்தத் தாக்குதல்கள் பயங்கரவாதத் தாக்குதல்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் புலன் விசாரணை மேற்கொள்ளப் படுவதாக அதிகாரிகள் கூறினர். அந்த மூன்று தாக்குதல் களுக்கு அரசியல் நோக்கம் காரணமா? அல்லது தனிப்பட்ட விரோதம் காரணமா? என்ற கோணத்திலும் புலன் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ கூறினார்.

நியூயார்க் மேன்ஹாட்டன் பகுதியில் குண்டு வெடித்த இடத்தில் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆதாரங்களைத் திரட்டி வருகின் றனர். ஒரே நாளில் நடந்த மூன்று தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க மக்களிடம் அச்சம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

Loading...
Load next