சிரியாவின் அகதிகளுக்கு அடைக்கலம் தர லெபனானின் உதவியை நாடும் மலேசியா

நியூ­யார்க்: சிரி­யா­வி­லி­ருந்து வெளி­யே­றும் அக­தி­களில் 3,000 பேருக்கு அடைக்­க­லம் தர உறு­தி­ய­ளித்­துள்ள மலேசியா, தனது உறுதிமொழியை நிறை­வேற்ற லெபனா­னின் உதவியை நாடி­யுள்­ளது. நான்கு மில்­லி­ய­னுக்­கும் கூடு­த­லான மக்­கள்­தொகையைக் கொண்­டுள்ள லெபனான் சுமார் 1.5 மில்­லி­யன் அக­தி­களுக்கு அடைக்­ க­லம் தந்­துள்­ளது. ஐநா பொதுச்­சபை­யின் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டுள்ள மலேசிய துணைப் பிர­த­மர் டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹமிடி, லெபனா­னி­லி­ருந்து சில அக­தி­களை மனி­தா­பி­மான அடிப்­படை­யில் வர­வேற்க எண்ணம் கொண்­டி­ருப்­ப­தாக லெபனான் பிர­த­மர் தம்மம் சாயேப் சலா­மு­டன் உரை­யா­டிய பிறகு செய்­தி­யா­ளர்­களி­டம் கூறினார். மலே­சி­யா­வில் ஏற்­கெ­னவே 79 சிரிய அக­தி­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர். இவ்­வாண்டு நிறை­வுக்­குள் மேலும் 421 பேர் அனு­ம­திக்­கப்­படு­வர். சிரிய அக­தி­கள் மலே­சி­யா­வுக்­குள் அனு­ம­திக்­கப்­படு­வதற்கு முன்பாக அவர்­களுக்கு பயங்க­ர­வாதத் தொடர்பு இருக்­கிறதா என்பது உள்­ளிட்ட பல சோதனை­கள் நடத்­தப்­படும் என்றார் டாக்டர் அஹ்மட்.