நேரடி விவாதத்தில் இன்று ஹில்லரி=டிரம்ப் மோதல்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பும் இன்று நேரடி விவாதத்தில் மோதுகின்றனர். இந்த நேரடி விவாதம் 4 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்றிரவு விவாதம் நடக்கிறது. அதில் அவர்கள் இருவரும் அமெரிக்காவின் நிலை, செயல்படுத்த உள்ள திட்டங்கள், அமெரிக்க பாதுகாப்பு ஆகிய 3 தலைப்புகளில் நேரடியாகப் பேசி கருத்துகளைத் தெரிவிக்க வுள்ளனர்.

இந்த நேரடி விவாதம் அமெரிக்க தொலைக்காட்சி களில் நேரடியாக ஒளிபரப் பாகிறது. அதை அமெரிக்க மற்றும் அனைத்துலக நாடு களைச் சேர்ந்த பல மில்லியன் பேர் பார்ப்பார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின் மூலம் யாருக்கு வாக்களிப்பது என்று இன்னமும் முடிவு செய்யாமல் இருக்கும் அமெரிக்க வாக்காளர்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும் என கருதப்படுகிறது. 2-வது நேரடி விவாதம் அக்டோபர் 4- ஆம் தேதி நடக்கிறது. அது துணை அதிபருக்கான விவாதமாகும். 3-வது விவாதம் அக்டோபர் 9- ஆம் தேதி வா‌ஷிங்டன் பல் கலைக்கழகத்தில் நடக்கிறது. இறுதி விவாதம் நிவேடா பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.