வரி ஏய்ப்பாளர்களுக்கு மன்னிப்பு; இந்தோனீசிய ஊழியர்கள் எதிர்ப்பு

ஜகார்த்தா: வரி ஏய்ப்பு செய்தவர் களுக்குப் பொது மன்னிப்பு வழங் கும் அரசாங்கத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக் கிறது. தலைநகர் ஜகார்த்தாவில் திரண்ட ஆயிரக்கணக்கான ஊழி யர்கள் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு செய்த செல்வந்தர் களை மன்னிப்பது நியாயமற்ற செயல் என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலர் முழக்கமிட்டனர். கணக்கில் காட்டாமல் வெளி நாட்டில் வைத்துள்ள சொத்துகளை மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொது மன்னிப்புத் திட்டம் ஊக்கமளிக்கிறது. இதன் மூலம் பெரிய அளவிலான அப ராதத் தொகைகளை இந்தோனீ சியர்கள் தவிர்க்க முடியும்.

கடந்த ஜூலை மாதம் தொடங் கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு அதிபர் ஜோகோ விடாடோ முன் னுரிமை வழங்கி வருகிறார். இதன் கீழ் இதுவரை ஏறக் குறைய 200 பில்லியன் அமெரிக்க டாலர் (272 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) சொத்துகள் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நாட்டு நிதி அமைச்சின் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

இருப்பினும் ஊழியர் அணியில் பெரும் பங்கு வகிக்கும் தொழி லாளர்கள், வரி ஏய்ப்பு செய்து குற்றச்செயல் புரிந்தவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது சட்டவிரோதமானது என்று கூறுகின்றனர்.

ஜகார்த்தா பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், செல்வந்தர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!