பள்ளியில் துப்பாக்கிச் சூடு; உயிருக்குப் போராடும் சிறுவன்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் தென்கரோலினா மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கூடத்தினுள் நுழைந்த ஓர் இளைஞன் கண்மூடித்தனமாக சுட்டதில் காயம் அடைந்த 6 வயதுச் சிறுவன் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அச்சிறுவனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அந்த இளைஞன் முன்னதாக அவனது தந்தையைச் சுட்டுக்கொன்றதாக போலிசார் கூறினர். அந்த துப்பாக்கிச் சூட்டில் ஓர் ஆசிரியரும் இரு மாணவர்களும் காயம் அடைந்தனர். அந்த இளைஞனை போலிசார் கைது செய்துள்ளனர்.

Loading...
Load next