நோபெல் பரிசுக்கு குடிமைத் தற்காப்புக் குழு நியமனம்

அலெப்போ: ‘ஒயிட் ஹெல்­மெட்ஸ்’ என்றழைக்­கப்­படும் சிரி­யா­வின் குடிமைத் தற்­காப்­புக் குழு இந்த ஆண்டின் அமை­திக்­கான நோபெல் பரி­சுக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. வெள்ளை நிற தலைக்­க­வ­சம் அணிந்து உதவிப் பணி­களில் ஈடு­படும் ஆயி­ரக்­க­ணக்­கான தொண்­டூ­ழி­யர்­களைக் கொண்டது இந்தக் குழு (படம்). சிரி­யா­வில் நடந்து வரும் போர் நட­வ­டிக்கை­க­ளில் சிக்கித் தவிக்­கும் பொது­மக்­களுக்கு இவர்­கள் உதவி வரு­கின்ற­னர். இடி­பாடு­களில் இருந்து காய­மு­ற்­றோரை மீட்டு மருத்­துவ சிகிச்சை அளிப்­பது, சட­லங்களை மீட்பது போன்ற பணி­களி­லும் அவர்­கள் ஈடு­படு­கின்ற­னர். இந்தத் தொண்­டூ­ழி­யர் குழு­வுக்கு நோபெல் பரிசு வழங்­கு­மாறு ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் இணையம் வழியாக நோபல் பரிசுக் குழு­வுக்கு பரிந்துரைத்தனர். நோபெல் பரிசு குறித்த முடிவுகள் எதிர்­வ­ரும் வெள்­ளிக்­கிழமை அறி­விக்­கப்­படும். படம்: ஏஎஃப்பி