மொரி‌ஷியசில் காணப்பட்ட விமானப் பாகம் MH370 விமானத்தினுடையது

கோலாலம்பூர்: மொரி‌ஷியஸில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் உடைந்த ஒரு பகுதி மலேசியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமாய் மறைந்த மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MH370 விமானத் தினுடையதுதான் என்று மலேசியா தெரிவித்துள்ளது. அந்த போயிங் 777ரக விமானம் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தம் 239 பேருடன் கோலாம்பூரிலிருந்து பெய்ஜிங் நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது காணாமற்போனது. இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த விமானம் எந்த இடத்தில் விழுந்து நொறுங்கியது என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது மொரி‌ஷியஸில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பகுதி மலேசிய விமானத்தின் இறக்கைப் பகுதியைப் போன்று இருக்கிறது என்று ஆஸ்திரேய அதிகாரிகள் கூறியிருப்பதாக மலேசிய போக்குவரத்து அமைச்சர் லியோ தியோங் லாய் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். ஏற்கெனவே இரு தீவுகளில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த விமானப் பாகங்கள் காணாமல்போன விமானத்தினுடையவைதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி

22 Nov 2019

ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை

நாடாளுமன்றக்  கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

22 Nov 2019

கூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்