வேலைப் பளுவால் மரணத்தை எதிர்நோக்கும் ஜப்பானியர்கள்

தோக்கியோ: கூடுதல் வேலைப்­­­பளு கார­­­ண­­­மாக ஜப்­­­பா­­­னிய ஊழி­­­ய­­­ர­­­ணியில் ஐந்தில் ஒருவர் மர­­­ணத்தை எதிர்­­­நோக்­­­கும் அபாயம் இருப்­­­ப­­­தாக ஜப்­­­பா­­­னிய அர­­­சாங்கம் மேற்­­­கொண்ட ஆய்வு ஒன்றின் முடிவு தெரி­­­விக்­­­கிறது. ஒவ்வோர் ஆண்டும் வேலைப்பளு­­­வினால் பக்­­­க­­­வாதம், மாரடைப்பு போன்றவை பலருக்கு ஏற்­­­படு­­­வ­­­தா­­­க­­­வும் வேலை அழுத்­­­தம் கார­­­ண­­­மாகச் சிலர் உயிரை மாய்த்­­­துக்­­­கொள்­­­வ ­­­தா­­­க­­­வும் கூறப்­­­படு­­­கிறது. வேலைப்­­­பளு கார­­­ண­­­மாக மரணம் நிகழ்­­­வது குறித்து ஜப்­­­பா­­­னில் வெளி­­­யி­­­டப்­­­பட்ட முதல் வெள்ளை அறிக்கை­­­யின் ஓர் அங்க­­­மாக இந்த ஆய்வு மேற்­­­கொள்­­­ளப்­­­பட்­­­டது.

ஜப்­­­பா­­­னிய பிர­­­த­­­மர் ‌ஷின்சோ அபேயின் அமைச்­­­ச­­­ரவை இந்த அறிக்கைக்கு சென்ற வெள்­­­ளிக்­­­கிழமை ஒப்புதல் அளித்தது. பிற நாட்­­­ட­­­வர்­­­களு­­­டன் ஒப்­­­பி­­­டுகை­­­யில் ஜப்­­­பா­­­னி­­­யர்­­­கள் அதிக நேரத்தை வேலையில் செல­­­வி­­­டு­­­வதை அந்த ஆய்வு காட்­­­டு­­­கிறது. சென்ற ஆண்டு டிசம்பர் முதல் இவ்­வாண்டு ஜனவரி வரை இந்த ஆய்வில் பங்­கேற்ற நிறு­வ­னங்களில் 22.7%, தங்க­ளது ஊழி­யர்­கள் ஒவ்வொரு மாதமும் 80 மணி­ நே­ரத்­துக்­கும் மேலாக ‘கூடுதல் நேர வேலை’ செய்­தி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளன.

Loading...
Load next