2017 மலேசிய வரவு செலவுத் திட்டம்: பற்றாக்குறையை கட்டுப்படுத்த தொடர் முயற்சி

கோலாலம்பூர்: மலேசிய ரிங்கிட் 656 பில்லியனுக்கு (S$218 பில்லியன்) பெருகிவிட்ட நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் தொடர் முயற்சியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதன்படி, நேற்று 2017ஆம் ஆண்டுக்கான மலேசிய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த பிரதமரும் நிதியமைச்சரு மான நஜிப் துன் ரசாக், பற்றாக் குறை மொத்த உள்நாட்டு உற் பத்தியில் மூன்று விழுக்காடாக குறைக்கப்படும் என்று கூறினார். அத்துடன், 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.4% உயர்ந்து மலேசிய ரிங்கிட் 260.8 பில்லியனாக (S$86.95 பில்லியன்) இருக்கும் என்று திரு நஜிப் தெரிவித்தார்.

மலேசியாவில் இவ்வாண்டு பொருளியல் வளர்ச்சி 4.1 விழுக் காடாக இருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டின் பொருளி யல் வளர்ச்சி 4லிருந்து 5 விழுக் காடுக்குள் இருக்கும் என்றும் அவர் முன்னுரைத்தார். இவ் வாண்டு ஜனவரி மாதம் உலக எண்ணெய் விலைகள் 12 ஆண்டு களில் இல்லாத வீழ்ச்சியைக் கண்டதால் அந்தக் காலகட்டத் தில் மலேசியாவின் ஏற்றுமதி வருமானம் பெரும் சரிவைக் கண் டது. அந்த நிலை மாறி எண்ணெய் விலைகள் தற்பொழுது உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது. எண் ணெய் விலைகளின் வீழ்ச்சி, 1எம்டிபி நிறுவன நிதியை திரு நஜிப் கையாடினார் என்ற குற்றச் சாட்டால் மலேசிய நாணயத்தின் மதிப்புக் குறைந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிட்டகாங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலின் மூன்று பெட்டிகள் முற்றிலுமாகச் சிதைந்தன. படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்: 16 பேர் பலி, பலர் காயம்

சாப்பிட்டதுபோக மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே வைக்கும் பழக்கம் எல்வுக்கு இருந்ததால், உணவைச் சாப்பிட வரும் கரப்பான் பூச்சி காதுக்குள் சென்றிருக்கலாம் என்றார் மருத்துவர். படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

ஆடவரின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பம்

மியோநகர் குளத்தில் நீந்திய மீனின் முகம் அச்சு அசலாக மனித முகத்தைப்போலவே இருப்பது குறிப்பிடத்தக்கது. படம், காணொளி: ஊடகம்

12 Nov 2019

'மனிதமுகம்' கொண்ட மீன்