களையிழந்து கிடக்கும் கிள்ளான் லிட்டில் இந்தியா

கிள்ளான்: தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலை யில் மலேசியாவின் கிள்ளான் லிட்டில் இந்தியா வட்டாரம் களை யிழந்து காணப்படுகிறது. தீபாவளி அலங்காரமோ, வண்ண விளக்குகளோ இல் லாமல் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடியுள்ளது என்று அவ் வட்டார வியாபாரிகள் பொருமி யிருக்கின்றனர். கிள்ளான் லிட்டில் இந்தியா வியாபாரிகள் சங்கத்தின் தலை வர் என். பி. ராமன், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் இரண்டு வாரத்திற்கு முன்பே லிட்டில் இந்தியா வட்டாரம் பெரும் திரளான மக்களுடன் சுறுசுறுப்புடன் இயங்குவது வழக் கம் என்று குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது தீபா வளிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் லிட்டில் இந்தியா வட்டாரம் களையிழந்து காட்சி யளிக்கிறது என்று தங்கராம் ஜூவல்லர்சின் நிர்வாக இயக்கு நருமான திரு ராமன் சொன்னார். "கிள்ளான் நகராண்மைக் கழகம் மூலம் மாநில அரசு இந்த இடத்தை அழகுபடுத்தவில்லை யென்றால் சங்கமே அலங்காரங் களில் ஈடுபட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தைச் சிறப்பிக் கும்," என்றும் அவர் கூறியதாக 'த ஸ்டார் ஆன்லைன்' தெரிவித் தது. கடந்த 2008ஆம் ஆண்டில் சிலாங்கூரில் எதிர்க்கட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து கிள் ளான் லிட்டில் இந்தியாவை அலங்கரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று கூறப் படுகிறது.

தீபாவளி பரபரப்பின்றி களையிழந்து கிடக்கும் கிள்ளான் லிட்டில் இந்தியா. படம்: த ஸ்டார் ஆன்லைன்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!