அகற்றப்பட்ட குடியேறிகள் முகாம்; பரிதவிக்கும் சிறார்

கேலே: பிரான்சின் கேலே நகரில் இருந்த குடியேறிகள் முகாம் அகற் றப்பட்டதை அடுத்து, அங்கிருந்த சிறாரின் நிலை பரிதாபத்துக் குரியதாகிவிட்டது. பாதிக்கப்பட்ட சிறாரில் பலர் பெற்றோர் துணை இல்லாமல் திண்டாடுவதாக உதவி அமைப்புகள் கவலை தெரி வித்துள்ளனர். பதிவு செய்யப்படாத சிறுவர்கள் திக்குதிசை அறியாது அங்கு மிங்கும் அலைவதாக Doctors Without Borders மருத்துவ அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். முகாமை விட்டு வெளியேறிய குடியேறிகள் அதற்குத் தீ வைத்த தால் அங்கிருந்த பலருக்குத் தங்கள் உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முகாமை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் அதற்குள் நுழையாதபடி முதலில் பார்த்துக்கொண்ட கலவரத் தடுப்பு போலிசார், சிறிது நேரம் கழித்து அவர்களது நிலை அறிந்து முகாமுக்குள் செல்ல ஏறத்தாழ 100 பேருக்கு அனுமதி வழங்கினர்.

முகாம் அகற்றப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த சிறாரின் நிலைமை கேள்விக்குறியாகி விட்டது. கிட்டத்தட்ட 1,500 சிறுவர் களுக்குச் சிறப்பு ஏற்பாடுகளுட னான கப்பல் கொள்கலன்களில் அடைக்கலம் அளிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கொள்கலன்கள் நிறைந்துவிட்டதால் கூடுதல் சிறுவர்களை ஏற்கமுடியவில்லை என்று கொள்கலன்களுக்கு ஏற்பாடு செய்தோர் தெரிவித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!