ராக்காவைக் கைப்பற்ற திட்டம்

வா‌ஷிங்டன்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைநகரமாக இயங்கி வரும் சிரியாவின் ராக்கா நகரைக் கூடிய விரைவில் கைப் பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ராக்காவில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்த சில வாரங்களிலேயே நடத்தவேண்டும் என்று அமெரிக்காவின் தற்காப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கத்திய நாடுகளில் பயங் கரவாதத் தாக்குதல்களை நடத்து வது குறித்து ராக்காவில் இருந்தவாறு பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர். தாக்குதல்களைத் தடுக்க ராக்காவைக் கைப்பற்றுவது அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து துருக்கி யின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது குர்தியப் போராளிகளுடன் இணைந்து ராக்காவுக்குள் புகுந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்க அதிகாரிகள் தாயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குர்தியப் படையுடன் சேர்ந்து அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் துருக்கியில் உள்ள குர்தியச் சமூகத்தினர் மத்தியில் சுதந்திர உணர்வு எழக்கூடும் என்று துருக்கி அஞ்சுகிறது. இருப்பினும், ஐஎஸ் பயங்கர வாத அமைப்புக்கு எதிராக தாக்கு தல் நடத்த யார் முன்வந்தாலும் அவர்களுடன் இணைந்து போராட தயாராக இருப்பதாக ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ உயர் அதிகாரி லெஃப் டிணன்ட் ஜெனரல் ஸ்டெஃபன் டௌன்சன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஈராக்கில் இருக்கும் மோசுல் நகரை ஐஎஸ் பயங்கரவாதி களிடமிருந்து கைப்பற்ற கடுமை யான சண்டை நடந்துகொண்டி ருக்கும்போதே ராக்காவுக்கான போர் தொடங்கும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித் துள்ளது. ஒரே நேரத்தில் மோசுலிலும் ராக்காவிலும் தாக்குதல்கள் நடத்தி பயங்கரவாதிகளுக்கு நெருக்குதல் கொடுப்பது மிகவும் முக்கியம் என்று மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளுக்குத் தலைமை தாங்கும் ஜெனரல் ஜோசஃப் எல். வோட்டல் கூறி னார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி

22 Nov 2019

ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை

நாடாளுமன்றக்  கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது.. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

22 Nov 2019

கூட்டத்தில் கலந்துகொண்டால் மட்டுமே அமைச்சர் ஆகலாம்