ஹில்லரியின் மின்னஞ்சல் விவகாரம்: மத்திய புலனாய்வுத் துறை மீண்டும் விசாரணை

வா‌ஷிங்டன்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளின்டனின் மின்னஞ் சல் விவகாரம் தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடர உள்ளதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. அந்த விவகாரம் தொடர்பில் மேலும் சில தகவல்களைத் திரட்டுவதற்காக மீண்டும் விசாரணையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த அறி விப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை உளவுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் காமே வெளியிட்டதும், இந்த அறிவிப்பின் எதிரொலியாக மக்களிடையே ஹில்லரியின் செல்வாக்கு சரிந்துவிடுமோ என ஜனநாயகக் கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஹில்லரி, ஃபுளோரிடா மாநிலத் தில் தனது ஆதரவாளர் களிடையே பேசியபோது, ‘தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இதுபோன்ற முழுமையான தகவல்கள் இல்லாத அறிவிப்பை வெளியிடுவது விசித்திரமாகவும் புதுமையாகவும் உள்ளது’ எனக் குறிப்பிட்டார்.