ஹாங்காங் நாடாளுமன்றத்தில் அமளி

ஹாங்காங்: சீனாவிலிருந்து ஹாங்காங் பிரிய வேண்டும் என்று விரும்பும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. அதைனத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வலுக்கட்டாயமாக நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேற்றப் பட்டதாக தகவல்கள் கூறின. இந்த அமளி காரணமாக சீனா இந்த விவகாரத்தில் தலையிடக் கூடும் என்று அச்சம் அதிகரித் துள்ளது. ஹாங்காங் நாடாளு மன்றத்தில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக கலவரம் நீடிக்கிறது.

ஹாங்காங்கில் சென்ற மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக ஆதர வாளர்களான திருமதி யாவ், திரு பெக்கியோ ஆகிய இரு உறுப்பினர்கள் நாடாளு மன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத் தடுத்தனர். இதனால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமதி யாவ் பாதுகாப்பு அதிகாரிகளால் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட் டார். பெக்கியோவை ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சூழ்ந்து கொண்டதால் அவரை அங்கிருந்து வெளியேற்ற முடிய வில்லை. இதனால் நாடாளுமன்றக் கூட்டம் இன்னொரு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள அவ்விருவரும் தகுதி பெறவில்லை என்று சீனா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கூக் குரல் எழுப்பினர்.

ஹாங்காங்கில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பெக்கியோ பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள முயன்றபோது அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுக்கின்றனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சிட்டகாங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலின் மூன்று பெட்டிகள் முற்றிலுமாகச் சிதைந்தன. படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்: 16 பேர் பலி, பலர் காயம்

சாப்பிட்டதுபோக மீதி உணவுகளை தனது படுக்கையறையிலே வைக்கும் பழக்கம் எல்வுக்கு இருந்ததால், உணவைச் சாப்பிட வரும் கரப்பான் பூச்சி காதுக்குள் சென்றிருக்கலாம் என்றார் மருத்துவர். படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

ஆடவரின் காதுக்குள் கரப்பான் பூச்சி குடும்பம்

மியோநகர் குளத்தில் நீந்திய மீனின் முகம் அச்சு அசலாக மனித முகத்தைப்போலவே இருப்பது குறிப்பிடத்தக்கது. படம், காணொளி: ஊடகம்

12 Nov 2019

'மனிதமுகம்' கொண்ட மீன்