ஹில்லரியின் மின்னஞ்சல் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி

வா‌ஷிங்டன்: அமெரிக்க மக்கள் தங்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்களிக்க வுள்ள நிலையில் ஹில்லரியின் மின்னஞ்சல் விவகாரம் தொடர்பில் அவர் மீது குற்றம் சாட்டுவதற்கோ அல்லது நடவடிக்கை எடுப்பதற் கோ எந்தக் காரணமும் இல்லை என்று மத்திய புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. ஹில்லரியின் தனிப்பட்ட மின்னஞ்சல்களை மீண்டும் ஆய்வு செய்த விசாரணைக் குழுவினர், அந்த விவகாரம் குறித்து மத்திய புலனாய்வுத் துறையினர் முன்பு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை கண்டறிந்ததாக மத்திய புலனாய்வுத் துறையின் தலைவர் ஜேம்ஸ் கொமே கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடத்தப் போவதாக அண்மையில் அறி வித்திருந்த திரு ஜேம்ஸ், தேர்தல் நாளுக்கு முதல் நாள் அந்த விவகாரம் தொடர்பில் ஹில்லரி மீது குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறினார். அவரது இந்த அறிவிப்பு ஹில்லரிக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

கிளிவ்லாந்தில் பிரசாரப் பேரணியில் ஹில்லரியுடன் கூடைப்பந்து விளையாட்டு வீரர் லெப்ரோன் ஜேம்ஸ். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!