மில்லியன் கணக்கான மக்கள் வாக்களிப்பு

வா‌ஷிங்டன்: உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தொடங்கிய வேளையில் மில்லியன் கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதாக தகவல் கள் கூறுகின்றன.

அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனும் (68வயது) குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்பும் (70வயது) ஃபுளோரிடா, மிச்சிகன், வட கெரோலைனா, பென்சில்வேனியா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் திங்கட்கிழமை கடைசிநேர தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கடைசி நாள் பிரசாரத் தின்போது இரு வேட்பாளர்களும் அவர்களுக்கு ஆதரவு திரட்டியவர் களும் கிட்டத்தட்ட 24 பேரணி கூட்டங்களை நடத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் முதல் கட்டமாக நியூ ஹேம்‌ஷியர் மாநிலத்தின் டிக்ஸ்வில் நோட்ச் என்ற சிறிய நகரில் திங்கட்கிழமை நள்ளிரவில் வாக்குப் பதிவு நடந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!