மத்திய புலனாய்வுத் துறை தலைவரை சாடிய ஹில்லரி

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலில் தோல்வி அடைந்த திருவாட்டி ஹில்லரி கிளின்டன் தனது தோல்விக்கு மத்திய புலனாய்வுத் துறைத் தலைவரின் தலையீடுதான் காரணம் என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு ஒரு சில நாட்களே இருந்த நிலையில் தனது மின்னஞ்சல் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய விருப்பதாக மத்திய புலனாய்வுத் துறைத் தலைவர் ஜேம்ஸ் கோமே அறிவித்ததால் தமது பிரசாரங் களின் வேகம் குறைந்து விட்டதாகவும் தனக்குக் கிடைக்க வேண்டிய ஆதரவும் வெகுவாகக் குறைந்தது என்றும் ஹில்லரி கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற திரு டிரம்பிற்கு எதிராக நியூயார்க்கில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நான்காவது நாளாக நீடித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமைக்கு அடையாளமாக காப்பூசிகளை விநியோகம் செய்தனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!