உலகை அசத்திய முழு நிலவு

எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு திங்கட்கிழமை அன்று பூமிக்கு மிகவும் நெருக்கமாக வந்த நிலவு வழக்கத்தைவிட மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தது. முப்பது மடங்கு பிரகாச மாகவும் 14 மடங்கு பெரியதாகவும் நிலவு தோன்றும் என்று கூறப் பட்டதால் உலக முழுவதும் ஆவல் பெருகியது. ஆஸ்திரேலியா முதல் தைவான் வரையில் கடற்கரை யிலும் உயர்மாடி கட்டடங்களிலும் கூடிய ஏராளமான மக்கள் இந்த அரிய காட்சியைக் கண்டு அதி சயித்தனர்.

சிவப்பு நிறத்தில் உதயமான நிலவு பின்னர் வெள்ளை நிறத் தில் ஒளிர்ந்தது. இதற்கு முன் 1948 ஜனவரி 26ஆம் தேதிதான் பூமிக்கு நெருக்கமாக நிலவு வந்துள்ளது. சிங்கப்பூரில் பெரிய அளவு நிலவைப் பார்க்க முடியவில்லை. சிங்கப்பூர் முழுவதும் மழையும் மந்தாரமுமாக இருந்ததால் நிலவை மேகங்கள் மறைத்து விட்டன. இதனால் இந்த அதிசய நிலவைப் பார்த்துவிட வேண்டும் என்று விரும்பிய பலர் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் 2034ல் மற்றோர் வாய்ப்பு மீண்டும் கிட்டும் என்று நம் பிக்கை தெரிவித்தனர்.

ஜெர்மனியில் உதயமான பெரிய நிலவு. படம்: இபிஏ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!