சீனா: அமெரிக்காவின் உளவு பார்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதி

பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனக் கடற்படைக் கப்பல் சென்ற வாரம் கைப்பற்றிய நீர்மூழ்கி ஆய்வுக்கலன், கடற் பகுதியில் அமெரிக்கா மேற் கொள்ளும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தப்பட்டது என்று சீனா கூறுகிறது. ஆயினும், ஆய்வுக் கலனைத் திருப்பித் தருவதில் பெய்ஜிங் பெரும்பாலும் பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படுத்தாது என்று சீன அரசாங்க ஊடகமும் வல்லு நர்களும் கூறுகின்றனர். அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், வழக்கத்திற்கு மாறான ஆய்வுக்கலன் கைப்பற்றல் பற்றி டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஆய்வுக்கலனைப் பெய்ஜிங் திருடிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அவர் ஏற்கெனவே சீனாவின் பொருளியல், ராணுவக் கொள்கைகளைக் கையாளு வதில் அதிக கெடுபிடியான அணுகுமுறையை மேற்கொள்ளப் போவதாக உறுதிக் கூறியிருக் கிறார்.

கடலடியில் ஆளில்லாமல் இயங்கும் ஆய்வுக்கலன் கடந்த வியாழக்கிழமை கைப்பற்றப் பட்டது. அண்மையில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை. இச்சம்பவம் பற்றி அமெரிக்கத் தற்காப்பு அமைச்சுப் பகிரங்கமாகப் புகார் செய்தது. ஆய்வுக்கலனைத் திரும்பப் பெற ஒப்பந்தம் பேசியிருப்பதாகச் சனிக்கிழமை தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!