ஈராக் கார்குண்டு வெடிப்பில் குறைந்தது 12 பேர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள காய்கறிச் சந்தையில் நேற்று கார்குண்டு வெடித்ததில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் கூறினர். சந்தேகத்திற்குரிய ஒரு வாகனத்தை நோக்கி பாதுகாப்பு காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதும் அந்த வாகன ஓட்டுநர் கார்குண்டை வெடிக்கச் செய்த தாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் சாட் மான் கூறினார். அந்த கார்குண்டு தாக்கு தலுக்கு தாங்களே காரணம் என்று ஐஎஸ் பயங்கரவாதக் குழு கூறியுள்ளது.

பாக்தாத் நகரில் ‌ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் வட்டாரங் களைக் குறிவைத்து போராளிகள் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் நேற்றைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‌ஷியா பிரிவினர் அதிகமாக வசிக்கும் சதர் நகர வட்டாரத்தில் உள்ள பிரபல காய்கறிச் சந்தையில் அத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் அங்கு கார்குண்டு வெடித்தது. ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அரசாங்கப் படையினரின் நெருக்குதல் அதி கரித்து வரும் வேளையில் அந்தப் போராளிகள், பொதுமக்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ளனர். மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களைக் குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல்களை போராளிகள் நடத்தி வருகின்றனர். ஐஎஸ் போராளிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட ஈராக் கின் மோசுல் நகரிலிருந்து போராளிகளை விரட்டியடிக்க ஈராக்கிய சிறப்புப் படையினரும் ‌ஷியா பிரிவு படையினரும் போராளிகளை எதிர்த்து கடுமை யாக சண்டையிட்டு வருகின் றனர்.

பாக்தாத்தில் உள்ள காய்கறிச் சந்தையில் கார்குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அந்த இடத்தில் மக்கள் கூடியுள்ளனர். அந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். ஐஎஸ் குழு அத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!