வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தையில் கொழுந்துவிட்டெரிந்த தீ

வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தையில் கொழுந்துவிட்டெரிந்த தீ

1 mins read
c40f63e7-3b1b-4983-ad85-785f34a4751c
-

இந்தோனீசியத் தலைநகரான ஜகார்த்தாவில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த சந்தை ஒன்றில் பற்றிய தீ கொழுந்துவிட்டெரிந்தது. நூற்றுக்கணக்கான தீயணைப்பாளர்கள் போராடி தீயை அணைக்க முற்பட்டனர். அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. டச்சு காலனி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பசார் செனென் சந்தையின் முதல் தளத்தில் நேற்று அதிகாலை வேளையில் பற்றிய தீ, மளமளவெனப் பரவியது. 50 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் நேற்று மதிய வேளையிலும் தீயை அணைக்க வீரர்கள் போராடிக் கொண்டிருந்ததாக ஏஎஃப்பி தெரிவித்தது. தீயில் சிக்கி யாரும் பலியாகவில்லை எனவும் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது எனவும் கூறப்பட்டது. திங்கட்கிழமைச் சந்தை எனப் பொருள்படும் பசார் செனெனில் இதற்கு முன்பும் பல பெரிய தீவிபத்துகள் நிகழ்ந்துள்ளன. படம்: ஏஎஃப்பி