அமெரிக்கர்களை ஒன்றிணைக்க டோனல்ட் டிரம்ப் உறுதி

வா‌ஷிங்டன்: திரு டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொள்வதற்கு முதல் நாள் ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது அமெரிக்கர் களை ஒன்றிணைக்கப்போவதாக உறுதியளித்தார். வா‌ஷிங்டனில் லிங்கன் நினைவிடத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் திரு டிரம்ப் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர் கள் முன்னிலையில் உரையாற்றிய டிரம்ப்,

"நமது நாட்டை நாங்கள் ஒன்றிணைக்கப்போகிறோம். பல ஆண்டுகளாக நமது நாட்டுக்காக செய்யப்படாமல் இருந்த நல்ல செயல்களை நாங்கள் செய்ய விருக்கிறோம்," என்று திரு டிரம்ப் கூறினார். "நம் மக்கள் அனைவருக் காகவும் அமெரிக்காவை மிகச் சிறந்த நாடாக நாங்கள் மாற்றுவோம்," என்றும் டிரம்ப் உறுதி அளித்தார். அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்; ராணுவம் வலுப்படுத்தப்படும்; எல்லையும் வலுப்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்றுக்கொள்வதற்கு முதல் நாள் தமது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அவருடன் அவரது மனைவி மிலானியா. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!