வறண்ட வானிலையால் இந்த ஆண்டு புகைமூட்ட அபாயம்: இந்தோ. அதிபர் எச்சரிக்கை

இவ்வாண்டு நாடு வறண்ட வானிலையை எதிர்நோக்குவதால் நில, காட்டுத் தீ தடுப்பு நட வடிக்கைகளில் மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்று இந்தோனீசிய அதிகாரிகளை அதிபர் ஜோக்கோ விடோடோ வலியுறுத்தி இருக்கிறார். "2015ல் நிகழ்ந்த தீச்சம்பவங் களால் ஏற்பட்ட குழப்பமான சூழ் நிலையை, அவசர கதியில் செயல்பட்டதை நாம் நினைவில் வைத்துள்ளோம்.

நாம் விழித்துக் கொள்ளும் முன்பே பல இடங் களுக்குத் தீ பரவி, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திய தால் நாம் என்ன செய்தாலும் அது பலன் தராமல் வீணாகிப் போனது," என்று திரு ஜோக்கோவி தெரிவித்தார். அமைச்சர்கள், ஆளுநர்கள், உயரதிகாரிகள் பங்கேற்ற நில, காட்டுத் தீ கட்டுப்பாடு தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

"2015ல் நிகழ்ந்தது போன்ற தீச்சம்பவங்கள் மீண்டும் நிகழ்ந்து புகைமூட்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை நாம் உறுதி செய்யவேண்டும். மெத்தனமாக இருக்கவேண்டாம். 2016ஐ விட இவ்வாண்டு அதிக வறட்சியாக இருக்கும் என்பதற்கான அறிகுறி கள் இப்போதே தென்படுகின்றன. அதனால் நாம் இன்னும் அதிக கவனமாக இருக்கவேண்டும்," என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!