அலுவலகப் பெண்களின் உடை விவகாரத்தில் கண்டிப்பு கூடாது: பிரிட்டன் நாடாளுமன்றம்

லண்டன்: வேலையிடத்தில் கவர்ச் சிகரமான உடை அணிய வேண் டும் என்றுரைக்கும் விதிகளைத் தடை செய்யும் வண்ணம் அரசாங்கம் சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப் பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாகு பாட்டை வளர்க்க உதவும் விதி கள் இவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெண்கள் சமத்துவம், புகார் மனுக்கள் என்னும் இரண்டு நாடாளுமன்றக் குழுக்களிலிருந்து குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன. லண்டனைச் சேர்ந்த அலுவலக முகப்பு ஊழியர் நிக்கோலா தோர்ப் கடந்த மே மாதம் உயர் குதிகால் காலணி அணியாமல் வேலைக்கு வந்ததற்காக வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

அன்றைய நாளுக்குரிய சம்ப ளமும் அவருக்கு வெட்டப்பட்டது. தமது அனுபவத்தை நாடாளு மன்றப் புகார் மனுக்கள் குழுவிடம் அந்தப் பெண் தெரிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சுமார் 150,000 கையெழுத்துகள் குவிந்தன. சமத்துவச் சட்டம் 2010ல் உயர் குதிகால் காலணி தொடர்பாகவும் வேலையிட உடைகள் தொடர் பாகவும் உள்ள விதிகள் ஆண், பெண் பாகுபாட்டை வளர்க்கக் கூடாது என்று பரிந்துரைப்பதாக குழுக்களின் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!