பாகாங் வெள்ளத்தில் குழந்தை பலி

குவாந்தான்: பாகாங்கில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளத்துக்கு முதல் முறையாக ஒரு குழந்தை பலியாகியிருக்கிறது. சனிக்கிழமை இரவு கம்போங் மேடாங் ஹீலிரில் உள்ள வீட்டுக்கு அருகே குழந்தை வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். சிட்டி நூர்டார்விஸ்யா அப்துல் ரஹ்மான் என்பது குழந்தையின் பெயர். அதற்கு ஒரு வயது எட்டு மாதங்கள் ஆகின்றன என்று பெகான் காவல் துறைத்தலைவர் அம்ரன் சித்திக் தெரிவித்தார்.

"குடும்ப உறுப்பினர்கள் வெளியே சென்ற முப்பது நிமிடங் களில் வீட்டுக்கு வெளியே உள்ள இரண்டு மரங்களுக்கு இடையில் குழந்தை மூழ்கிக்கிடந்தது," என்று குழந்தையின் தந்தை முஹமட் ஃபிர்டாஸ் சஸாலி, 24, கூறினார். "குழந்தை காணாமல் போன தால் அவர் அண்டை வீட்டார் களின் உதவியை நாடினார். "இந்தச்சம்பவம் நடைபெற்ற போது மனைவி, மாமியார், மனைவியின் சகோதரர் ஆகியோர் வீட்டில் இருந்தனர்," என்று சம்ப வம் குறித்து நேற்று செய்தியாளர் களிடம் பேசிய திரு அம்ரன் சித்திக் தெரிவித்தார். மாலை 7.22 மணி அளவில் குழந்தை காணாமல் போயிருந்தது என்றார் அவர். வீட்டின் கதவை மனைவியின் சகோதரர் மூட மறந்துவிட்டதாகவும் அப்போது வெளியே சென்ற குழந்தையை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டதாகவும் தந்தை முஹமட் ஃபிர்டாவுஸ் சொன்னார். அன்று இரவு பெக்கான் மருத்துவமனையில் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டது.

பாகாங்கில் உள்ள மரத்தாண் டவர் கோயிலையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாஹாங்கும் ஒன்று. இங்கிருந்து சுமார் 7,000 பேர் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டனர். பாகாங், ஜோகூர், கிளந்தான், திரங்கானு, சிலாங்கூர், சாபா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவ 6,000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்று தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைன் கூறினார். படம்: பெர்னாமா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!