அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகல்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளின் ரஷ்யத் தூதருடன் மேற்கொண்ட ரகசிய உரையாடல் அம்பலமானதை அடுத்து அவர் பதவி விலகி யுள்ளார். துணை அதிபர் மைக் பென்ஸ், பிற வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் ஆகியோரை அமெ ரிக்காவுக்கான ரஷ்யத் தூத ருடனான தமது உரையாடலின் தொடர்பில் தவறாக வழிநடத்தி யது சென்ற திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பதவியில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே நீடித்திருந்த திரு ஃபிளின், சென்ற டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா வின் கட்டுப்பாடுகள் குறித்து தாம் ரஷ்யத் தூதருடன் மேற்கொண்ட உரையாடல் பற்றி முழுமையான தகவல்களை வழங்கவில்லை என்று கூறினார். ரஷ்யத் தூதர் செர்கே ஐ கிஸ்லையாக்குடன் தாம் உருப் படியான உரையாடல் எதுவும் மேற்கொள்ளவில்லை என திரு ஃபிளின் ஏற்கெனவே கூறியிருந் தார். அதனை திரு பென்ஸ் தமது தொலைக்காட்சி நேர்காணலின் போது குறிப்பிட்டிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!